KANCHIPURAM SILK SAREE
A blog about Silk Sarees especially Kanchipuram Silk Saree.
Saturday, 12 May 2012
Thursday, 10 May 2012
KANCHIPURAM SILK SAREE-A REGISTERED GI
தூய பட்டின் வரலாறு
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வள்ளுவப் பெருமகனார் கைத்தறி
தொழிலை தன் வாழ்க்கையோடு இணைத்துக் கொண்டு வாழ்ந்தார். அதை உலக மக்கள் அறிந்துக்
கொள்ளும் வகையில் அவர் எழுதிவைத்த திருக்குறள்:
செய்யும்
தொழிலை சீர்தூக்கி பார்க்கும்கால் நெய்யும்
தொழிலுக்கு நிகரில்லை.
அவர் கருத்துக்கு மறுப்பு யாரும் கூற முடியாது.
உணவுக்கும் உடுத்தும் உடைக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை,
உழுதுண்டு வாழ்வாரே
வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு
பின்செல் பவர்.
என்ற திருக்குறள் மூலம் நமக்கு கூறி இருக்கிறார்.
காஞ்சிபுரம் அசல் பட்டுச்சேலைகளுக்கே உலக அளவில் ஓர் தனி இடம் உண்டு. அதற்குக்
காரணம் அது ஓர் பாரம்பரியம் மிக்க தெய்வீகத்தன்மை உடையதாக உலக மக்கள்
கருதுவதேயாகும்.
இனி இந்த பட்டு நமக்கு எப்படி கிடைத்தது என்று பார்ப்போம். இந்த மென்மையான
பட்டு நூல் நமக்கு கிடைத்தது மிகவும் சுவாரிசியமானது.
இந்தியாவின் பட்டுப் பற்றிய குறிப்புகள் வேதகாலத்திற்கு முந்தியது என்று
கூறப்படுகிறது. கி.மு.140ல்
சீனாவிலிருந்து இந்தியாவிற்கு பட்டு அறிமுகமானது என்று ஆராய்ச்சியாளர்கள்
கூறுகின்றனர். கி.பி. இரண்டாவது நூற்றாண்டில் கௌவுடில்யர் என்ற அறிஞர் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்ற
நூலில் பட்டுப் பற்றியக் குறிப்புகள்
அறியமுடிகிறது. கனிஷ்கர் காலத்திலேயே அதாவது கி. மு. ஐயிம்பத்து எட்டில்
பிரசித்திப்பெற்ற பட்டு இந்தியாவிலிருந்து ரோமாபுரிக்கு ஏற்றுமதியாகியுள்ளது என்ற
செய்தியும் ஆராய்ச்சியாளர்கள் மூலம் அறியமுடிகிறது.
மத்திய ஆசிய நாடுகளுக்கும் தெற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் பட்டு ஏற்றுமதி செய்வதிலே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடும் போட்டி இருந்து வந்தது
எனவும் வரலாற்று வாயிலாக அறியமுடிகிறது. கி.பி. 16, 17ம் நூற்றாண்டுகளில்
இந்தியாவில் பட்டு வளர்ப்பதை முகலாய மன்னர்கள் ஊக்கப்படுத்தி வந்தனர் என்று
தெரிகிறது. மைசூரில் பட்டு வளர்ச்சிக்கு வித்திட்டவர் திப்புசுல்தான் இவர் இந்திய சுதந்திரப்போராட்டத்தில் முதல் மாவீரன்.
இப்படிப்பட்ட பட்டை தற்செயலாகக் கண்டுப்பித்தவர் ஓர் சீனத்து ராணி. இன்று
பட்டுச்சேலை அணியும் உலகப் பெண்கள் அனைவரும் அந்தச் சீனத்து ராணிக்குதான் நன்றி
செலுத்தவேண்டும். அது எப்படி சீனத்து ராணிக்கு தற்செயலாக கிடைத்தது என்று
பார்ப்போம்.
கி.மு.2700ம் ஆண்டில் சீனாவில் இந்த அதிசயமிக்க நிகழ்வு நடந்தது. சீனத்து
மகாராஜா வழக்கம் போல தனது அரண்மனையை சுற்றிப் பார்க்கவும் அதன் அருகில் உள்ள அரண்மனைத்
தோட்டத்தை சுற்றிப் பார்க்கவும் வந்தார். அப்படி அவர் வந்து பார்த்த சமயத்தில்
அங்குள்ள தாவரம் ஒன்றில் அதன் இலைகள் சிதைந்து இருந்ததை கண்டார். இதை தனது மகாராணி
ஹூவாங்டியிடம் கூறினார். மகாராணி ஹூவாங்டி தன்னிடம் மகாராஜா கூறியதை உற்றுக்
கவனித்தார்.
இந்த இலைகளை மிகவும் அழகான வெள்ளைப் புழுக்கள் கடிதத்துக் கொண்டிருப்பதைப்
பார்த்தார். சில இடங்களில் மிகவும் அழகான பழுப்பு நிறக் கூடுகளை கண்டுவியந்தார்.
அந்த கூடுகளை விநோதப் பொருளாக கருதி சேகரித்து வைத்துக் கொண்டார். அந்த புழுக்கள்
தின்ற இலைகள் முசுக்கொட்டை தாவரத்தினுடையது. இந்த தாவரத்தை மல்பெர்ரி என்றும்
ஆங்கிலத்தில் கூறுவார்.
மகாராணி எப்பொழுதும் அந்த அழகியக் கூடுகளை தன் கைகளில் வைத்துக்கொண்டு அழகுப்
பார்ப்பார். ஒரு சமயம் ராணி அவர்கள் சூடான தேநீர் அருந்துவதற்காக தன் கையில்
இருந்தப் பட்டுக்கூடுகளை தன் மடிமேல் வைத்துக்கொண்டு தேநீர்
அருந்திக்கொண்டிருந்தார். அப்பொழுது அந்தக் கூடுகள் எதிர்பாராவிதமாக தன் மடியில்
இருந்து நழுவி சூடானத் தேநீர் கோப்பைக்குள் விழுந்துவிட்டது. பதட்டமடைந்த ராணியார்
சட்டென்று கோப்பைக்குள் கையைவிட்டு கூடுகளை எடுக்கலானார்.
தேநீரில் விழுந்தக்கூடுகள் வழவழப்பாக இருந்ததால் அதனை கைகளில் எடுக்கமுடியாமல்
விரல் நகங்களில் எடுத்தார். அப்பொழுது தன் விரல் நகங்களில் மெல்லிய மின்னும்
இழைகள் ஒட்டிக்கொண்டு வருவதைக் கண்டார். அவற்றை பல இழைகளாக ஒன்று சேர்த்துப்
பார்த்தார். ஒன்று சேர்ந்த இழைகள் ஓர் அழகான நூலாகக் கண்டார். இப்படி தற்செயலாக
பட்டு நூலை கண்டுப்ப்பிடித்தார் சீனத்து ராணி ஹூவாங்டி.
HISTORY OF PURE SILK
HISTORY OF PURE SILK
Subscribe to:
Comments (Atom)

